பிரிஞ்சால் சாஸ் ரெசிபி | Brinchal Sauce Recipe !





பிரிஞ்சால் சாஸ் ரெசிபி | Brinchal Sauce Recipe !

0
தேவையானவை: 
எட்டாக நறுக்கிய கத்திரிக்காய் ஒரு கப், மைதா மாவு 3 டீஸ்பூன், 

சோள மாவு 3 டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் 4, 

நறுக்கிய வெங்காயம் ஒரு கப், 

நறுக்கிய குடமிளகாய் அரை கப், 

இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், 

தக்காளி சாஸ் 2 டீஸ்பூன், 

சர்க்கரை அரை டீஸ்பூன், 

உப்பு தேவைக்கேற்ப, 

எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
பிரிஞ்சால் சாஸ் ரெசிபி
நறுக்கிய கத்திரிக் காயுடன் மைதா மாவு, சோள மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து லேசாக நீர் தெளித்துப் பிசிறி பொரித் தெடுக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

வதங்கிய வுடன் மிளகாய்த் தூள், உப்பு, தக்காளி சாஸ் விட்டுக் கிளறி, அரை கப் நீர் விட்டு, கொதித்ததும் பொரித்த கத்திரித் துண்டுகளைப் போட்டுக் கிளறி இறக்க… 

பிரிஞ்சால் சாஸ் ரெடி! இதை சப்பாத்தி, தோசை, பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)