டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை செய்வது !





டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை செய்வது !

தேவையான பொருட்கள்;

மீன் - அரை கிலோ (கருவாவல், பாறை, கொடுவா ஏதாவது ஒரு வகை மீன்)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிள்காய் - 2

மல்லி,கருவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை :
டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை
முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து அரை ஸ்பூன் மிள்காய்த் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அரை மணி கழிந்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த பின்பு அதே பேனில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,

இஞ்சி பூண்டு, மிள்காய், மல்லி கருவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து மசிய விடவும்,

அத்துடன் மீதி உள்ள அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பொரித்த மீனை சேர்த்து பிரட்டி சிம்மில் தக்காளி சுண்டும் வரை வைக்கவும்.

சுவையான டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை ரெடி.மல்லி இலை தூவி பரிமாறவும். இது நான், சப்பாத்தி, சாதம் வகைகளுடன் பரிமாறலாம்.
Tags: