சப்பாதிக்கு பிச்சி போட்ட சிக்கன் செய்வது | Tearing Chikken Recipe !





சப்பாதிக்கு பிச்சி போட்ட சிக்கன் செய்வது | Tearing Chikken Recipe !

0
சப்பாதி, சோறுக்கு பொருத்தமான பிச்சி போட்ட சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சப்பாதிக்கு பிச்சி போட்ட சிக்கன் செய்வது

தேவையான பொருட்கள்

வேக வைக்க

சிக்கன் - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - 1/4 Tspதண்ணீர் - தேவையான அளவு

வதக்க :

எண்ணெய் - 2 Tsp

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Tsp

தக்காளி - 2

மஞ்சள் - 1/4 Tsp

மிளகாய் பொடி - 1 Tsp

கரம் மசாலா - 1 Tsp

உப்பு - தே. அளவு

தனியா பொடி - 2 Tsp

மிளகுப் பொடி - 2 Tsp

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

சிக்கனை கழுவி குக்கரில் போட்டு மஞ்சள், உப்பு சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவிற்கு போதுமான நீர் ஊற்றி வேக வைக்கவும். நான்கு விசில் வந்ததும் அணைத்து விடவும். 

சிக்கன் வெந்ததும் வெப்பம் தணிந்ததும் சிக்கனை பிச்சி போட்டு உதிரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும். 

கூடவே பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு பிரட்டவும். 

அதோடு உப்பு மிளகாய் பொடி, மஞ்சள், தனியா பொடி சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கொதிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். பின் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். 

தண்ணீர் வற்றியதும் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டவும். இறுதியாக கொத்தமல்லி சேத்து இறக்கி விடவும். சுவையான பிச்சி போட்ட சிக்கன் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)