மசாலா காரப்பொரி செய்வது எப்படி? | Spicy Carapore Recipe !





மசாலா காரப்பொரி செய்வது எப்படி? | Spicy Carapore Recipe !

0
இந்த மழை காலத்திற்கு நாவிற்கு இதமான மசாலா பொரி செய்வது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்வோம். 
மசாலா காரப்பொரி செய்வது

இந்த மசாலா காரப்பொரி யினை சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:-

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்

பூண்டு – பொடிதாக நறுக்கியது (1 ஸ்பூன்)

காய்ந்த மிளகாய் – 6

கருவேப்பிலை – இரண்டு கொத்து

வேர்க்கடலை – 1/4 கப்

பொட்டுக் கடலை – 1/4 கப்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

சக்கரை பொடி செய்தது – 1/2 ஸ்பூன்

தூள் உப்பு – 1/2 ஸ்பூன் (பொரியல் உப்பு இல்லை என்றால் உப்பு சேர்த்து கொள்ளவும், இல்லை யெனில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை)

பொரி – ஐந்து கப்

செய்வது எப்படி?

இந்த மசாலா காரப்பொரி செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். 

 எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அவற்றில் 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

பின் அதனுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பொடிதாக நறுக்கிய பூண்டினை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். 

பிறகு 6 காய்ந்த மிளகாயினை உடைத்து போட்டு இவை அனைத்தையும் திரும்பவும் ஒரு முறை நன்றாக கிளறி விடுங்கள்.

அதன் பிறகு இரண்டு கொத்து கருவேப்பிலை, 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 பொட்டுக்கடலை இவை அனைத்தும் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து கொள்ளவும்.

பின் இவற்றில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும், அதாவது ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பொடித்த சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூ உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

இறுதியாக ஐந்து கப் பொரியை இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறுங்கள். பொரியானது மொறு மொறுப்பாக வரும் வரை நன்றாக கிளறி கொள்ளவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி அனைவருக்கும் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)