உருளைக்கிழங்கு கேரட் சூப் செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு கேரட் சூப் செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் கேரட் சாப்பிடுவதால் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. காலையில் கேரட்டை உட்கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது. 
உருளைக்கிழங்கு கேரட் சூப் செய்வது
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது மற்றும் கண்களுக்கும் மிகவும் முக்கியமானது. 

தினமும் கேரட் ஜுஸ் அருந்தி வந்தால் பார்வைத் திறன், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை மட்டுமின்றி, உடலின் பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். ஜூஸ் ஆக அருந்துவதைக் காட்டிலும் கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடலாம். 

சரி இனி உருளைக்கிழங்கு கேரட் பயன்படுத்தி டேஸ்டியான உருளைக்கிழங்கு கேரட் சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 2

வெங்காயம் - 1

பூண்டுப்பற்கள் - 2

வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை இலை - 1

தண்ணீர் - 4 முதல் 5 கப் வரை

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:

உருளைக் கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக் கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பிரஷர் குக்கரை அடுப்பிலேற்றி அதில் நெய் அல்லது ஆலிவ் எண்ணையை

(இல்லை யென்றால் சாதாரண சமையல் எண்ணையை உபயோகப் படுத்தலாம்) விட்டு வெங்காய த்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும். 

பின்னர் அதில் 4 முதல் 5 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையைப் (இதை பிரிஞ்சி இலை என்றும் சொல்வார்கள்) போடவும்.

மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, 

பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும். வீட் பிரட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டுமெனில், குக்கரி லிருந்து தண்ணீரை வடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். 

 மீதமுள்ள உருளை கிழங்கு, கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்து, வடித்து வைத்துள்ள நீரில் போட்டு, மீண்டும் அடுப்பிலேற்றி சூடாக்கி (கொதிக்க விட தேவை யில்லை) பரிமாறவும்.
Tags: