நாகூர் கல்யாண பிரியாணி செய்வது எப்படி?





நாகூர் கல்யாண பிரியாணி செய்வது எப்படி?

0
நாகூர் என்றாலே பலருக்கும் தர்கா தான் நினைவுக்கு வரும். ஆனால் நாகை மாவட்ட சுற்று வட்டாரங்களில் அதே அளவு பிரபலமானது நாகூர் கல்யாண பிரியாணி. 
நாகூர் கல்யாண பிரியாணி செய்வது
திருமணம் போன்ற விருந்துகளில் பெரிய அளவில் சமைக்கப் படுவதால் இதற்கு கல்யாண பிரியாணி என்ற பெயர் வந்தது.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி, ஆற்காடு பிரியாணி வரிசையில் நாகூர் பிரியாணியும் சுவையில் தனித்தன்மை வாய்ந்தது.
தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 2 கப்

சீரகப் பொடி - 3 ஸ்பூன்

பெருஞ்சீரகப் பொடி - 3 ஸ்பூன்

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 5

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

கோழிக்கறி- 500 கிராம்

மல்லி புதினா- 1 கப்

தக்காளி- 7

இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தயிர் - 1 கப்

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சிறிதளவு ஊற்றிக் கொள்ளவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காயைப் போட்டுக் கிளறவும். 

எண்ணெய் நன்கு சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் கொட்டி நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

பின்னர் அத்துடன் சிறிது மல்லி, புதினாவை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இப்போது அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது 2 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும். 

அதன் பிறகு அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய் சேர்ந்து மீண்டும் வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு தயிர் விட்டு நன்கு கிளறவும்.

500 கிராம் கோழிக்கறியை அதில் போட்டு சிறிதளவு மிளகாய்ப் பொடி, சிறிதளவு சீரகப் பொடி, சிறிதளவு பெருஞ்சீரகப் பொடி, உப்பு சிறிதளவு இவை அனைத்தை யும் ஒன்றாக நன்கு கிளற வேண்டும். 
இதை அப்படியே மூடி வைத்து விடவும். இன்னொரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து அதில் ஊற வைத்த அரிசியைக் கொட்ட வேண்டும்.

சிறிதளவு கலர் பொடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். மீண்டும் கோழிக்கறியை நன்கு கிளறி கறி வெந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும்.
கொதிக்க வைத்த அரிசி அரைவேக்காடு வெந்ததும், நீரை வடித்து விட வேண்டும். நீர் முழுவதுமாக வடிந்ததும் அரிசியை எடுத்து கோழிக்கறி இருக்கும் பாத்திரத்தில் கொட்டவும்.

மீண்டும் சிறிதளவு கலர் பொடி சேர்த்து பாத்திரத்தை காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி விடவும். 10 முதல் 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நன்கு கிளறி இறக்கினால் நாகூர் ‘கல்யாண’ பிரியாணி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)