மல்லி - புதினா பிரியாணி செய்வது எப்படி?





மல்லி - புதினா பிரியாணி செய்வது எப்படி?

0
வைட்டமின்A, B1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செம்பு, துத்தநாகம், இரும்பு போன்ற தாதுக்கள் என பல்வேறு சத்துக்கள் இந்த கொத்தமல்லி விதையில் அடங்கி உள்ளன. 
மல்லி - புதினா பிரியாணி செய்வது
நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.. நரம்பு மண்டலத்தை உறுதிப் படுத்துகிறது. வெறும் குழம்பில் வாசனைக்கு மட்டுமே மல்லியை பயன்படுத்தி கொண்டிருக்கிறோமே தவிர, உண்மையிலேயே இதை முறையாக பயன்படுத்தினால் நிறைய நன்மைகளை பெறலாம். 

ஆனால், ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள், இந்த கொத்தமல்லியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

காரணம், ரத்தத்தில் இருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த விதைகள் ஊக்குவிப்பதாக சொல்கிறார்கள்.

இந்திய உணவுகளில் சில உணவுகள் செரிமான பிரச்சினைகளை உண்டாக்குவது மிகவும் பொதுவானவை. 

எனவே புதினா சட்னியை தயாரிக்கும் போது கொத்தமல்லி, எலுமிச்சை, கருப்பு உப்பு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கும் போது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், உணவுக்கு மேம்பட்ட சுவையையும் தருகிறது. 
புதினா வயிற்றுக்கு நல்லது. குறிப்பாக கொத்தமல்லி, எலுமிச்சை போன்றவை ஒட்டு மொத்த உடலின் நோய் எதிர்ப்பு அழற்சியை தூண்டி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

புதினா இலைகள் இயற்கையாகவே மிகவும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன, அவை குமட்டலிலிருந்து விடுபட உதவும், இதனால் நீங்கள் உடனடியாக ஃபிரெஷாக உணர முடியும்.

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,

புதினா, கொத்த மல்லி - தலா ஒரு சிறிய கட்டு,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெறும் வாணலியில் பச்சரிசியை வறுக்கவும். புதினா, கொத்த மல்லியைச் சுத்தம் செய்து தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி... 

இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, 3 கப் நீர் விட்டு அரிசி, உப்பு, அரைத்து வைத்த புதினா - கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலக்கி, குக்கரை மூடவும். 
ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அதிக செலவில்லாத இந்த பிரியாணி, அசத்தலான சுவையில் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)