டேஸ்டியான ஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி?





டேஸ்டியான ஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி?

0
ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் (PHYTOCHEMICALS) உள்ளிட்டவை, மனிதர்களின் உடல்நலனுக்கு ஏற்றவைகளாக உள்ளது மட்டுமல்லாது, ஓட்ஸை எளிதில் சமைக்க் கூடியதாக உள்ளது. 

சிறிது காலம் முன்புவரை, அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த ஓட்ஸ், இன்று அனைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும், பல்வேறு வெரைட்டிகளுடன் நிறைந்து இருக்கின்றன. 

Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப்பொருளே ஓட்ஸ் ஆகும். மற்ற பயிர்களை ஒப்பிடும்போது, குறைந்த அளவு தண்ணீர், குறைவான அளவிற்கே உரங்களே, ஓட்ஸ் பயிரிட போதுமானதாக உள்ளது. 
ஈரப்பதம் நிறைந்த, குளிர்ச்சியான பகுதிகளில் ஓட்ஸ் அதிகளவில் விளைவிக்கப் படுகிறது.  ஓட்ஸ், முதலில் பதப்படுத்தப்படும் போது, அதன் தவிடு மற்றும் அதிலுள்ள ஜெர்மை நீக்காதவாறு பார்த்துக் கொள்ளப் படுகிறது. 

இதன் காரணமாக, அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து முதலியவை வீண் ஆவதில்லை. இந்த பதப்படுத்தப்பட்ட ஓட்ஸில் இருந்து பல்வேறு வகை ஓட்ஸ் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

தேவையானவை:

ஓட்ஸ் – 1 கப் பால் அல்லது

தேங்காய் பால் – ½ கப்

பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:
ஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி?
ஓட்ஸை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். பவுலில் ஓட்ஸ், பால் அல்லது தேங்காய்ப் பால், தேவையான தண்ணீர், பட்டைத் தூள் சேர்த்துக் கலக்கவும்.
தோசை மாவு பதத்தில் கலக்க வேண்டும். சூடான தவாவில் நெய் ஊற்றி, பான்கேக்கு களை ஊற்றவும். இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் பான்கேக் ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். இது உங்க காலை உணவை மேம்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் மீல் ரொட்டி, காய்கறிகள் இவற்றை எல்லாம் சேர்த்து சாண்ட்விட்ச் தயாரிக்கலாம். 

ஓட்ஸ் மீலில் பால் அல்லது தயிர் சேர்த்து சியா விதைகள், எள் விதைகள் சேர்த்து இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து பிறகு அதை சாப்பிடலாம். 

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனினும், இதன் அதிகப்படியான நுகர்வு ஆனது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான சிக்கல்களை ஏற்படுத்த கூடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)