தனியா பர்பி செய்வது எப்படி? | Making Coriander Barfi !





தனியா பர்பி செய்வது எப்படி? | Making Coriander Barfi !

0
தேவையானவை 

கொத்த மல்லித் தூள் - ஒரு கப் 

சூரியகாந்தி விதை - கால் கப் 

உலர்ந்த தேங்காய் - அரை கப் 

சர்க்கரை - முக்கால் கப் 

நெய் - 2 மேசைக் கரண்டி 

ஏலக்காய் பொடி - சிறிது 

தண்ணீர் - கால் கப் 

செய்முறை : 

முதலில் கடாயில் அல்லது நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூரியகாந்தி விதையை வறுத்து, தனியாக எடுத்து வைக்க வேண்டும் . 
தனியா பர்பி செய்வது எப்படி?
பிறகு அதே கடாயில் கொத்தமல்லித் தூளை நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். 

இப்பொழுது அதை வறுத்த சூரியகாந்தி விதையுடன் சேர்த்து விட்டு, அதே கடாயில் உலர்ந்த தேங்காயை வறுத்தெடுத்து கொத்த மல்லித் தூளுடன் சேர்க்கவும். 

பின் கடாயில் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

சர்க்கரை கரைந்தவுடன், வறுத்து வைத்துள்ள வற்றைப் போட்டு ஏலக்காய் பொடியையும், 

மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கரண்டியால் கிளறவும். ஓரங்களில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். 

பின்னர் ஒட்டாமல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சுவையும், மணமும் நிறைந்த தனியா பர்ஃபி தயார். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)