கற்பூரவல்லி சட்னி செய்வது எப்படி? | Makeing Karpuravalli Chutney !





கற்பூரவல்லி சட்னி செய்வது எப்படி? | Makeing Karpuravalli Chutney !

0
தேவையானவை :
கற்பூரவல்லி இலைகள் – 15, 

தேங்காய்த் துருவல் – கால் கப்,

பச்சை மிளகாய் – 2,

புளி – கோலி குண்டு அளவு,

பெருங்காயம் – சிட்டிகை,

கடுகு, உளுந்தம் பருப்பு – தலா கால் டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – அரை டீஸ்பூன்.

கற்பூரவல்லி சட்னி,

செய்முறை :
கற்பூரவல்லி சட்னி செய்வது
கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு

பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனி யாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.

அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும். 

 சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)