கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி? | Make Millet Vegetable Safari !





கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி? | Make Millet Vegetable Safari !

0
தேவையான பொருள்கள் :
கம்பு மாவு - 1 கப்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

முட்டை கோஸ் - 100 கிராம்

கேரட் - 2

உருளைக்கிழங்கு - 1

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பால் - அரை கப்

செய்முறை :
கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது
முட்டைகோஸ், கேரட், உருளைக் கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி களாக தேய்த்து வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள். ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)