குதிரைவாலி கூழ் செய்வது எப்படி? | Kuthiraivali Ragi Koozh Recipe !





குதிரைவாலி கூழ் செய்வது எப்படி? | Kuthiraivali Ragi Koozh Recipe !

0
உடல் பலம் பெற கம்பு ஒரு சிறந்த உணவாகும், எனவே உடல் வலிமையுடைய அதிகளவு இந்த கம்பங்கூழ் சாப்பிடலாம். இதுவரை கம்பங்கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம், 
குதிரைவாலி கூழ் செய்வது

இதை தொடர்ந்து குதிரைவாலி கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி – 50 கிராம்,

கேழ்வரகு மாவு – 200 கிராம்,

உப்பு – தேவைக்கேற்ப,

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,

தயிர் – 1/2 கப்,

தண்ணீர் – தேவையான அளவு

செய்வது எப்படி?

முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடி வைக்கவும். நன்றாகப் புளித்து விடும்.

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பாதி வெந்ததும் அதில் ஊற வைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும் பொழுது இறக்கவும்.
பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.

குதிரைவாலி கூழ் பயன்கள்

குதிரை வாலியில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ள தால் எலும்பு களுக்கு நல்ல வலிமை தரும்.

மேலும் இவற்றுள் இரும்புசத்து நிறைந்துள்ள தால் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

குதிரை வாலியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.

பெண்கள், இதய நோயாளிகள் இந்த குதிரைவாலி கூழ் அதிகளவு உண்டு வர உடலுக்கு மிகவும் நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)