கம்பங்கூழ் செய்வது எப்படி? | Kambu Kool Recipe !





கம்பங்கூழ் செய்வது எப்படி? | Kambu Kool Recipe !

0
கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய இந்த வெஜிடபிள் கஞ்சி (kambu recipes) எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கம்பங்கூழ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

ஊற வைத்த கம்பு – 1/2 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கடுகு, சீரகம், மிளகு – தலா 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

வெஜிடபிள் (கேரட், பீன்ஸ், காலிஃ ப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேக வைத்து அரைத்தது) – 3 கப்

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

பூண்டு – 3 பல்

உப்பு, மிளகு தூள் – சுவைக்கேற்ப

எலுமிச்சை பழம் – 1/2 பழம்

செய்முறை :

கம்பங்கூழ் செய்முறை முதலில் கம்பை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்து கொள்ளவும்.

பின்பு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து காய்கறி களையும் சேர்த்து, சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும்

மஞ்சள் தூள் ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பின்பு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்கிய வுடன்

அவற்றில் இருக்கும் பிரியாணி இலையை எடுத்து விட்டு அந்த கலவையை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அவற்றில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் அல்லது காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.
பின்பு இவற்றில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் ஆகிய வற்றை சேர்த்தால் சுவையான மற்றும் ஆரோக்கிய மான வெஜிடபிள் கஞ்சி தயார்.

கம்பங்கூழ் பயன்கள் ..!

இந்த வெஜிடபிள் கஞ்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன்,

இரத்த சோகை உள்ளவர் களுக்கு ஆரோக்கிய மான உணவாகும். கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவாகும்.

இந்த வெஜிடபிள் கஞ்சியை குழந்தை களுக்கு அடிக்கடி தரலாம். இரவில் அதிகநேரம் தூங்காமல் கண் விழித்திருப்பவர், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள்,

அதிக சூடுடைய பகுதியில் வேலை செய்பவர்கள், அதிக உடல் உஷ்ண முடையவர்கள் என்று அனைவரும் இந்த கம்பங்கூழ் சாப்பிடுவது மிகவும் நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)