ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் அறிமுகம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. 
ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் அறிமுகம்

இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சி யாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாக கூறப்படுகிறது. 

'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகிய வற்றின் கலப்பினமாகும். 

இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பயிரிடப்பட்டது. 

'திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை' கண்டறிந்து வணிக ரீதியாக வெளியிடு வதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டு களுக்கு இந்த ஆப்பிளை விளை விப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 

"இது மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்த தாகவும் உள்ளது" என்று கூறுகிறார். 

இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ். 

இந்த வகை ஆப்பிளை சரியான முறையில் குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப் பட்டது முதல், 10-12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும் என்று கேட் மேலும் கூறுகிறார். 
புதிய ரக ஆப்பிள்

12 மில்லி யனுக்கும் மேற்பட்ட 'காஸ்மிக் கிரிஸ்ப்' ரக ஆப்பிள் மரங்கள், கடுமையான உரிம நடைமுறை களுக்கு பிறகு, 

அமெரிக்கா வின் வாஷிங்டன் மாகாணத்தில் மட்டும் பயிடப்பட் டுள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த வகை ஆப்பிளின் உண்மையான பெயர் டபிள்யூஏ38. எனினும், இவற்றின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், 

இதற்கு 'காஸ்மிக் கிரிஸ்ப்' என்ற பெயர் வந்தது. அமெரிக்கா விலேயே மிகவும் அதிகளவில் ஆப்பிளை அறுவடை செய்யும் மாகாணமாக விளங்கும் 

வாஷிங்டனின் பிரபல ஆப்பிள் ரகங்களான 'கோல்டன் டெலிசியஸ்', 'ரெட் டெலிசியஸ்' ஆகியவை சமீப காலமாக 'பிங்க் லேடி', 'ராயல் கலா' ஆகிய ரகங்களிட மிருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. 

வாழைப் பழங்களை அடுத்து அமெரிக்கா வில் அதிகம் விற்பனைை யாகும் இரண்டாவது பழமாக ஆப்பிள் இருக்கிறது
ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் அறிமுகம் ! ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஆப்பிள் அறிமுகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 02, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚