ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் இந்தியர்கள் - ஆய்வுத் தகவல் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இந்தியர்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் அமர்ந்து சாப்பிடுவதையே அதிகம் விரும்புவதாக உபர் ஈட்ஸ் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் இந்தியர்கள்

உபர் ஈட்ஸ் சர்வதேச ஆய்வு நிறுவனமான இப்சாஸ் (IPSOS) உடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தி யுள்ளது.

இந்தியர்களின் மனநிலை உணவு விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு நடத்தி யுள்ளது.

இதற்காக 13 நகரங்களில் 4000 வாடிக்கை யாளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ’இந்திய உணவு மனநிலை’ என்ற பெயரில் ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது.

அதில் 76 சதவீதம் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளது.

பிற 13 சதவீதத்தினர் அலுவலகம் போன்ற மற்ற லொக்கேஷன் களில் ஆர்டர் செய்து சாப்பிடுவ தாகவும் 5 சதவீதம் நண்பர்களின் வீட்டில் ஆர்டர் செய்து சாப்பிடுவ தாகவும் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பாக தம்பதிகள் வீட்டில் ஓய்வாக பொழுதைக் கழிக்கவும், நேரத்தை மிச்சம் செய்வதற் காகவும் ஆர்டர் செய்வதாகவும்,

குறிப்பிட்ட உணவகங் களை கண்டறிந்து அதிலேயே தொடர்ந்து ஆர்டர் செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வீட்டிற்கு சமைக்க ஆள் அமர்த்துவதும், ஆர்டர் செய்து சாப்பிடுவதும் ஒரே பணச் செலவுதான் என்ற காரணத்திற் காகவும்

ஆன்லைன் ஆர்டரை விரும்பு கின்றனர் என இப்படி பல காரணங்களை மக்களின் மனநிலை யாக முன் வைக்கிறது உபர் ஈட்ஸ்.

”மக்கள் வாரத்தில் ஒரு முறையேனும் வீட்டு உணவு அல்லாமல் வெளியே சாப்பிட முடிவு செய்கின்றனர். அப்படியான வாடிக்கை யாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக் கின்றனர்.

இந்த வேலையை இன்னும் சுலபமாக்கும் விதமாக ஹோட்டல் உணவுகளை வீட்டிற்கே கொண்டு வரும் எங்களைப் போன்ற ஆன்லைன் நிறுவனங் களை நாடுகின்றனர்” என்று உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பன்ஸி கோட்டெச்சா கூறி யுள்ளார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் இந்தியர்கள் - ஆய்வுத் தகவல் ! ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் இந்தியர்கள்  - ஆய்வுத் தகவல் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 17, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚