ஸ்பெஷல் வடை செய்வது எப்படி? | How to make a special Vadai Recipe !





ஸ்பெஷல் வடை செய்வது எப்படி? | How to make a special Vadai Recipe !

0
தேவையானவை :

துவரம் பருப்பு – அரை கப்,

கடலைப் பருப்பு – கால் கப்,

பச்சரிசி – 25 கிராம்,

முழு உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,

முந்திரிப் பருப்பு – 10,

காய்ந்த மிளகாய் – 5,

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை – சிறிதளவு,

இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தோல் சீவவும்),

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை :
ஸ்பெஷல் வடை செய்வது எப்படி?

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, அரிசி, முழு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய வற்றை அலசி, ஒன்று சேர்த்து நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு நீரை வடித்து, தோல் சீவிய இஞ்சி சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

இதனுடன் பெருங்காயத் தூள், உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப் படுத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)