இஞ்சி துவையல் செய்வது | Ginger Tuvaiyal Recipe !





இஞ்சி துவையல் செய்வது | Ginger Tuvaiyal Recipe !

0
தேவையான பொருட்கள்

இஞ்சி – சிறிய துண்டு

தேங்காய் துருவல் – அரை கப்

காய்ந்த மிளகாய் – 3

புளி – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக் கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை
இஞ்சி துவையல் செய்வது

இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சி ஆகிய வற்றை சேர்த்து வறுக்கவும். 

இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், 

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து வதக்கினால் சுவையான இஞ்சி துவையல் தயார். 

 * இதை மூன்று, நாட்களுக்கு வைத்திருந்து பயன் படுத்தலாம்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)