கொத்தவரங்காய் பச்சடி செய்வது | Cluster Beans Pachidi Recipe !





கொத்தவரங்காய் பச்சடி செய்வது | Cluster Beans Pachidi Recipe !

0
தேவையானவை:
துவரம் பருப்பு – அரை கப்,

கொத்தவரங் காய் – 100 கிராம்,

பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 2,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

புளி – சிறு நெல்லிக்காய் அளவு,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
கொத்தவரங்காய் பச்சடி செய்வது

துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். கொத்தவரங் காய், வெங்காயம், தக்காளி ஆகிய வற்றை பொடியாக நறுக்குங்கள்.

பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து,

வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங் காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங் காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து எல்லா வற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.

2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்… ‘கொத்தவரங் காயில் இப்படி ஒரு பச்சடியா?’ என்று வியப்பீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)