சுச்சினி அல்வா ரெசிபி செய்வது எப்படி?





சுச்சினி அல்வா ரெசிபி செய்வது எப்படி?

0
செர்ரி பழத்தில் இருக்கும் வைட்டமின் பி3 என்ற நியாசின் சத்து தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. கொழுப்பை கரைக்கிறது. பீட்டா கரோட்டின் இளைமையை புதுப்பித்து ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்கிறது. 
சுச்சினி அல்வா ரெசிபி செய்வது எப்படி?
போலிக் அமிலம் ரத்த சோகையை தடுக்கிறது.  செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது. 

கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக் கொள்வது கண்களுக்கு நல்லது.

இப்பழத்தில் இருக்கும் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு மண்டலத்தில் உறுதியாக பாதுகாக்கிறது. 

நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க் கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக் கொள்வது நல்லது. 

இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. சர்க்கரை, பால், கோயா சேர்த்து தயாரிக்கப்படும் இந்த அல்வா ருசியானதாக இருக்கும். 

இதில் செர்ரி மற்றும் மலாய் சேர்த்து தயாரிக்கப் படும் இந்த அல்வா குடும்பம் மற்றும் நண்பர் களுக்கு செய்து தரலாம்.

தேவையான பொருட்கள்

1/2 கிலோ கிராம் சுச்சினி

1/2 லிட்டர் பால்

60 gms நெய்

1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

120 gms சர்க்கரை

125 gms கோயா

for garnishing செர்ரி மற்றும் கேசரி மலாய்

எப்படி செய்வது 
சுச்சினியை நன்கு கழுவி கொள்ளவும். சுச்சினியை கெட்டியாக துருவி கொள்ளவும். அடிகணமான பாத்திரத்தில் சுச்சினி, பால் சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு கடாயில் நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும். 4-5 நிமிடங்கள் வரை சூடு படுத்தவும். தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்கவும். 

அத்துடன் சர்க்கரை சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கிளறவும். அதில் கோயா சேர்த்து 10 நிமிடங்கள் நெய் பிரிந்து வரும் வரை சூடுப் படுத்தவும். 

இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும். அதன் மேல் செர்ரி மற்றும் மலாய் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)