வெஜிடபிள் சோம் டாம் சாலட் ரெசிபி | Vegetable Som Tam Salad Recipe !





வெஜிடபிள் சோம் டாம் சாலட் ரெசிபி | Vegetable Som Tam Salad Recipe !

0
பீன்ஸ், செர்ரி டொமேடோ, பூண்டு, கடலை, பப்பாளி ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கிய மாகவும் ருசியாகவும் இருக்கும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
வெஜிடபிள் சோம் டாம் சாலட்

தேவையான பொருட்கள்

150 கிராம் பப்பாளி, உதிர்ந்த

30 கிராம் கேரட், சின்ன சின்ன துண்டாக்கிய

30 கிராம் ஃப்ரென்ச் பீன்ஸ்

30 கிராம் செர்ரி டோமேடோ

5 கிராம் பூண்டு

3 கிராம் சில்லி

45 மில்லி லிட்டர் சோம்டாம் ட்ரெசிங்

15 கிராம் கடலை, வறுக்கப்பட்ட

எப்படி செய்வது

மிளகாய், பூண்டு இரண்டையும் தட்டி கொள்ளவும். அத்துடன் பீன்ஸ் சேர்க்கவும். அதில் சோம் டாம் சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் வறுத்து அரைத்த கடலையை சேர்க்கவும்.

அத்துடன் செர்ரி டொமேடோ, பப்பாளி மற்றும் கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் வைத்து அதில் வறுத்த கடலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)