டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் பற்றி உணவியல் நிபுணர் !





டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் பற்றி உணவியல் நிபுணர் !

0
கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் பற்றி உணவியல் நிபுணர் சிவப்ரியா இங்கே விவரிக்கிறார்.
டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் !
டர்னிப்பின் தாவரவியல் பெயர் ப்ராசிகா ரப்பா (Brassica rapa). Brassicaceae என்கிற கடுகு குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப் படுத்துகி றார்கள் தாவரவிய லாளர்கள்.
டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக் களைக் கொண்டுள்ளது. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகளும் உண்ணப் படுகின்றன.

கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்களில் இக்காய் பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. டர்னிப் ஈராண்டுகள் வாழும் தாவர வகையைச் சார்ந்தது.

முதல் ஆண்டில் ஸ்டார்சினை தனது வேர்ப் பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இரண்டாவது ஆண்டில் மஞ்சள் நிற உயரமான பூக்களைத் தோற்று விக்கிறது.

பின் அதிலிருந்து பட்டாணியைப் போன்ற காயினைக் காய்த்து விதைகளை உற்பத்தி செய்கிறது. விதைகள் உற்பத்திக்குப் பின் இச்செடியானது மடிந்து விடுகிறது.
டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் !
டர்னிப்செடியானது வளரும் போது ஏழு மாதத்திற்கு மேல் குளிர்காலம் வந்தால் செடியானது முழுவதுமாக பிடுங்கப்பட்டு இலைகள் வாடாமல் பாதுகாக்கப் படுகிறது.

பின் வசந்த காலத்தில் மீண்டும் நடப்பட்டு விதைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. டர்னிப்பின் மேல் தோலானது அடிப்புறத்தில் வெள்ளை நிறமாகவும், மேற் புறத்தில் வைலட் நிறமாகவும் காணப்படுகிறது.

கிட்னியை கவனியுங்கள் மருத்துவக் குறிப்புகள் !

சூரிய ஒளிபடும் பகுதியானது வைலட் நிறத்தில் காணப்படுகிறது. டர்னிப்பானது இனிப்பாக உருளைக் கிழங்கின் சுவையினை ஒத்து உள்ளது.

மேலும் இக்காய் உருளைக் கிழங்கினைப் போன்ற சத்துக் களைக் கொண்டும், உருளைக் கிழங்கின் எரிசக்தியைப் போன்று மூன்றில் ஒருபங்கு எரி சக்தியினையும் கொண்டுள்ளது.

டர்னிப்பில் உள்ள சத்துக்கள்

டர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் !
டர்னிப்பில் வெள்ளை, பர்பிள், சிவப்பு, பேபி, ஸ்னோ பால், கோல்டன் என ஆறு வகைகள் உள்ளது. இவை அனைத்தும் சூப்கள், கூட்டு வகைகள், கறி வகைகள், சாலட் என பல வகைகளில் மக்கள் பயன்படுத்து கின்றனர்.

டர்னிப்பில் வைட்டமின்கள் சி, பி1 (தயாமின்), பி2 (ரிபோ ஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவில் காணப்படு கின்றன.

விட்டமின் இ மற்றும் கே ஆகிய வற்றையும் இக்காய் கொண்டுள்ளது.

மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் காணப்படு கின்றன.

உணவாக தன் குடலையே தரும் மீன் !

குறைந்த அளவு எரிசக்தி, கார்போ ஹைட்ரேட், புரோடீன், அதிகளவு நார்சத்து ஆகியவை இக்காயில் காணப்படுகின்றன. 

மேலும் இதில் பைட்டோ நியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவை உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)