தக்காளி தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?





தக்காளி தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் சத்துக் குறைவினால் வரும் குழந்தைகள் உடலைச் சரிசெய்து ஊட்டம் அளித்து வளர்ச்சியைத் தருகிறது. தேங்காயைத் துருவிப் போட்டு அரைத்து போட்டும் சமையலில் பயன்படுத்துவார்கள். 
தக்காளி தேங்காய்ப்பால் சூப் செய்வது
உலர்த்தப்பட்ட தேங்காய்யும் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பாலை காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். அந்தப் பசும் எண்ணெய் தலை வழுக்கையைப் போக்கி முடி வளர்க்கும். தீப் புண்களை ஆற்றும்.

தேங்காயில் உயர் ரகப் புரதம், அமினோ அமிலங்கள்,அதிக அளவில் பொட்டாசியம், சோடியம், மெக்னிசியம்,  பாஸ்பரஸ், கந்தகம் முதலியவை உள்ளன. உயிர்ச் சத்து B அதிக அளவிலும் A சிறிதும் இருக்கிறது.

எலும்புருக்கி நோயின் போது சோர்ந்து பலவீனம் அடைந்த போதும், நாள்தோறும் நான்கு முதல் 8 அவுன்ஸ் தேங்காய் பால் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிட்டும். 
தேங்காய் பால் காய்ச்சல் தணிக்கவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது. சரி இனி தக்காளி தேங்காய்ப்பால் பயன்படுத்தி டேஸ்டியான தக்காளி தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?

தக்காளி - 2,

தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,

வறுத்து பொடித்த தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன், 

சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், 

மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,

கொத்தமல்லி - சிறிது, 

பிரெட்டின் ஓரங்களை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தது - சிறிது,

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 

ஆறியதும் தோலை உரித்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து 
உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப் பால், கொத்த மல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.
Tags: