சூப்பரான புளி பேரீச்சை சட்னி செய்வது எப்படி?





சூப்பரான புளி பேரீச்சை சட்னி செய்வது எப்படி?

0
பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. 
சூப்பரான புளி பேரீச்சை சட்னி செய்வது எப்படி?
இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால்  இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம்.

பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2,  பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன. 

குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால், தினமும் பேரீச்சம் பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும். 
பேரீச்சம் பழத்தில் செலினியம், தாமிரம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். 

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப்  பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குடலிறக்கத்தையும் சீர் செய்கிறது. 

பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி போன்றவை சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களைப் போக்கவும், கோடுகள்  மறையவும் உதவுகின்றன. 

சரி இனி பேரீச்சம்பழம் பயன்படுத்தி சூப்பரான புளி பேரீச்சை சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையான பொருட்கள் : . 

1/4 கப்புளி

1/4 கப் பேரீச்சம்பழம்.

2 கப்தண்ணீர்

1/4 கப்வெல்லம்

1/4 தேக்கரண்டி சோம்பு பவுடர்

1/2 தேக்கரண்டி கொத்த மல்லித் தூள்

1/4 தேக்கரண்டிசீரகத் தூள்

1/2 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த் தூள்

சுவைக்கு உப்பு

செய்முறை :
புளி பேரீச்சை சட்னி செய்வது
ஒரு பெரிய கடாயில் புளி, பேரீச்சம்பழம், வெல்லம் சேர்க்கவும் 2 கப் தண்ணீரை ஊற்றவும். 10 நிமிடங்கள் இந்த கலவையை வேக விடவும். 

இதில் சோம்பு பொடி, சீரகப் பொடி, கொத்த மல்லித் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். பிறகு புளி, பேரீச்சம் பழத்தையும் மசிக்கவும். 
சிம்மில் வைத்து 2 நிமிடம் வேக விடவும். இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிஜில் வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)