வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல் செய்வது | Plantain, capsicum Vatakkal Recipe !





வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல் செய்வது | Plantain, capsicum Vatakkal Recipe !

என்னென்ன தேவை?
வாழைக்காய் – 1,

குடைமிளகாய் – 1/4 கிலோ,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – 1 துண்டு,

பூண்டு – 3 பல்,

தனியா – 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

மிளகு – 1/2 டீஸ்பூன்,

வெங்காயம் – 1 ,

சீரகம் – 1/2 டீஸ்பூன்,

சோம்பு – 1 டீஸ்பூன்,

வெள்ளை எள் – 1/2 டீஸ்பூன்,

தோல் நீக்கிய வேர்க்கடலை – 25 கிராம்,

எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்
தனியா, காய்ந் தமிளகாய், மிளகு, சீரகம், வெள்ளை எள், வேர்க்கடலை அனைத்தை யும் வறுத்து பொடி செய்யவும். இஞ்சி, பூண்டை நசுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், வாழைக்காய், குடை மிளகாய் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

அதில் நசுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின் பொடித்த பொடியை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
Tags: