அன்னாசி அரிசி பாயசம் செய்வது | Pineapple Rice Paysam Recipe !





அன்னாசி அரிசி பாயசம் செய்வது | Pineapple Rice Paysam Recipe !

0
என்னென்ன தேவை?

அன்னாசி துண்டுகள் – அரை கப்

பாசுமதி அரிசி – கால் கப்

சர்க்கரை – அரை கப்

ஏலப்பொடி – 1 டீஸ்பூன்

மில்க் மெய்ட் – 3 டேபிள் ஸ்பூன்

பால் – அரை கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம், முந்திரி துண்டுகள் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?
அன்னாசி அரிசி பாயசம் செய்வது

பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி பால், அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

அன்னாசித் துண்டு களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி யெடுத்து, வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் சேர்த்துக் குழைய விடுங்கள். 

நன்றாகக் குழைந்ததும் சர்க்கரை, ஏலப்பொடி, மில்க் மெய்ட் ஆகிய வற்றைச் சேருங்கள்.

அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து இறக்கி விடுங்கள். 

இந்தப் பாயசத்தைச் சூடாகவும் குடிக்கலாம். இது கோடை காலம் என்பதால் குளிர வைத்தும் பருகலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)