பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி செய்வது எப்படி?





பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி செய்வது எப்படி?

0
இன்னைக்கு வீட்டில் என்ன பொரியல் என தாயிடம் கேட்கும் பிள்ளைகளுக்கு பீன்ஸ் பொரியல் என்று பதில் கிடைத்தால் அவ்வளவு தான்… முகம் மாறிவிடும். வேற பொரியலேயே கிடைக்க வில்லையா என கோபம் வரும். 
பட்டாணி - பீன்ஸ் - உருளை பிரியாணி
ஆனால் பீன்ஸில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின்களின் தாவர ஆதாரம் என பீன்ஸை குறிப்பிடலாம். 

பீன்ஸ் ஒருவரின் இதயம், குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  பீன்ஸில் உள்ள புரதம் நமது உடலைப் பராமரிப்பதிலும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

பீன்ஸில் அமினோ அமிலங்கள், ஃபோலேட் உட்பட பல முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ஃபோலேட் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது. 
கர்ப்ப காலத்தில் பீன்ஸ் சாப்பிட்டால் கருவை சுமக்கும் நரம்பு குழாய்களில் குறைபாடுகள் இருந்தால் அது சரி செய்யப்படுகிறது. 

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),

நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஊற வைத்த பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

சின்ன வெங்காயம் - 10,

பூண்டுப் பற்கள் - 5, தக்காளி - ஒன்று,

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 6,

முந்திரித் துண்டுகள் - 4.

செய்முறை: 
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். 

குக்கரில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை வதக்கி மஞ்சள் தூள், உப்பு, அரிசி சேர்த்து மூன்றரை கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
ஆவி வந்ததும், பட்டாணியைச் சேர்த்துக் கிளறி 'வெயிட்’ போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறி யதும் கூக்கரைத் திறந்து நன்கு கிளறி விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)