வேர்க்கடலை மசாலா பாஸ்தா செய்வது | Peanut Spice Pasta Recipe !





வேர்க்கடலை மசாலா பாஸ்தா செய்வது | Peanut Spice Pasta Recipe !

0
சமைக்க தேவையானவை

வேர்க்கடலை - ஒரு கப்

பாஸ்தா - ஒரு பாக்கெட்

தக்காளி துண்டுகள், வெங்காய துண்டுகள் - தலா கால் கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வேர்க்கடலை மசாலா பாஸ்தா செய்வது

முதலில் வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதில், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் 5 முதல் 8 நிமிடம் வேக விடவும். 

பின்னர் தண்ணீரை வடிகட்டி குழாயின் அடியில் பிடித்து குளிர்ந்த நீரில் அலசி, சிறிது நேரம் ஆற விடவும். 

பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவை யிலிருந்து சிறிது எடுத்து ஒவ்வொரு பாஸ்தாவிலும் அடைத்து கொள்ளவும

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கி, 

பாஸ்தாக் களை சேர்த்து, உப்பு, கரம் மசாலாத்தூள் போட்டு,- 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான வேர்க்கடலை மசாலா பாஸ்தா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)