பனங்கற்கண்டு ரவை பொங்கல் செய்வது எப்படி?





பனங்கற்கண்டு ரவை பொங்கல் செய்வது எப்படி?

0
பனங்கற்கண்டு நிறைந்த மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக்கேண்டி என்பர். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப் படுத்தப்படாத சர்க்கரை ஆகும். 
பனங்கல்கண்டு ரவை பொங்கல்
பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப் படுகிறது. எனவே பனங்கற்கண்டு என்று அழைக்கின்றனர். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை கருப்பட்ட என்பார்கள். 

இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை பனங்கற்கண்டு எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். 

முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டில் குறைந்த அளவே இனிப்பு சுவை இருப்பதால் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்னை, இருமல், சளி, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்னை போன்றவற்றிற்கு பனங்கற்கண்டு நல்ல மருந்தாகிறது. 

தேவையானவை:

வறுத்த ரவை 200 கிராம்,

பாசிப்பருப்பு 100 கிராம்,

பனங்கல்கண்டு 400 கிராம்,

வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம்,

நெய் 100 கிராம், ஏலக்காய்த் தூள் கால் டீஸ்பூன்.

செய்முறை:

பனங்கல்கண்டில் கால் கப் நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும். நெய்யில் ரவையை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.

பாசிப்பருப்பை குழைய வேக விட்டு, வறுத்த ரவை மற்றும் வடிகட்டிய பனங்கல்கண்டு பாகு சேர்க்கவும். வெந்து வருகையில் இறக்கி, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)