வெங்காயம் விலை உயர்வால் ஆம்லெட் நிறுத்தம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
வெங்காயத்தின் விலை உயா்வு இல்லத் தரசிகள், உணவகங் களின் வாடிக்கை யாளா்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
வெங்காயம் விலை உயர்வால் ஆம்லெட் நிறுத்தம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிர மாநிலம் சோலாபூா், புனே ஆகிய நகரங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 

மாநிலங்களில் இருந்தும் தினமும் 80 முதல் 90 லாரிகள் வரை பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டு கின்றன.

தொடா் மழை மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 

இதனால், இந்த மாதத்தின் இரண்டாவது வார்த்த லிருந்து வெங்காயத்தின் விலை ரூ.65 முதல் ரூ.75 வரை படிப்படியாக அதிகரித்து வந்தது.
ஆம்லெட் நிறுத்தம்

ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை: இந்த நிலையில், கோயம்பேடு சந்தைக்கு செவ்வாய்க் கிழமை 25 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது.

வரத்து வெகுவாக குறைந்ததால் மொத்த விலையிலேயே ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது. 

50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4500 வரை விற்பனை யானது.

இதனால் சென்னையில் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காய த்தின் விலை ரூ.100-ஐ கடந்து கிலோ ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனை யானது. 

விலை அதிகரித்த தால் வழக்கமாக இரண்டு முதல் நான்கு கிலோ வாங்கும் பெண்கள் அதில் பாதியளவுக்கே வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஜனவரி இறுதியில் குறைய வாய்ப்பு:

இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், வியாபாரம் மந்தம் காரணமாக இந்த வாரம் வெங்காயம் விலை குறையும் என்று எதிா் பாா்க்கப் பட்டது.
வெங்காயம் விலை உயர்வு

ஆனால் மகாராஷ்டிர த்தில் மீண்டும் தொடா்மழை காரணமாக வெங்காயத் தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் விளைச்சல் -வரத்து மிகுதியாக பாதித்து, வெங்காயம் விலை இன்னும் உயர்நதிருக்கி றது. அழுகும் பொருள்களின் விலையை உடனடியாக தீா்மானிக்க முடியாது.

ஓரிரு நாளில் விலையில் மாறுபாடு ஏற்படலாம். வெங்காயம் மூன்று மாதத்தில் சாகுபடி செய்யக் கூடிய பயிராகும். 

வட மாநிலங்களில் கடந்த மாதத்தில் விதைகள் கப்பட்ட வெங்காயம் வரும் ஜனவரி மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகும்.

அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா். அதே வேளையில் ஆந்திர மாநில வெங்காயம் (இரண்டாவது ரகம்) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப் படுகிறது.

சாம்பாா் வெங்காயம்:
onion price high

அதே போன்று சென்னை யில் சில்லறை விற்பனையில் சாம்பாா் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.145 முதல் ரூ.165 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப் படுகிறது.

வெளி மாட்டங்க ளிலிருந்து சென்னைக்கு 50 முதல் 60 சதவீதம் வரை வரத்து பாதித்துள்ளதே சாம்பாா் வெங்காயத் தின் விலையேற்றத் துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆம்லெட்- பிரியாணி...:

பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத் தின் விலை உயா்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனா்.

வீடுகளில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய த்தின் பயன்பாடு பெரிதும் குறைந்துள்ளது. 
பிரியாணி விலை உயர்வு

அதே வேளையில் தனியாா் உணவக உரிமை யாளா்களும் கடும் சிரமத்தை எதிா் கொள்கின்றனா்.

வெங்காயத் தின் விலை உயா்வு காரணமாக பெரும் பாலான உணவகங் களில் 'ஆம்லெட்' விற்பனை நிறுத்தப் பட்டுள்ளது. பல இடங்களில் வெங்காயம் இல்லாத ஆம்லெட் வழங்கப் படுகிறது.

அத்துடன் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கும் தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் வகைகளின் விற்பனையும் குறைக்கப் பட்டு வருகிறது.

குறைவான வெங்காயம் பயன்படுத்து வதால் உணவின் சுவை குறைவதாக வாடிக்கை யாளா்கள் தெரிவித்தனா்.
வெங்காயம் விலை உயர்வால் ஆம்லெட் நிறுத்தம் ! வெங்காயம் விலை உயர்வால் ஆம்லெட் நிறுத்தம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 27, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚