நெல்லி சாதம் செய்வது எப்படி? | Nelly Rice Recipe !





நெல்லி சாதம் செய்வது எப்படி? | Nelly Rice Recipe !

0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப்,

அரை நெல்லிக்காய் – அரை கப்,

பச்சை மிளகாய் -10,

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,

பெருங்காயம் – 1 டீஸ்பூன்,

கடுகு, உளுந்து, மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

உப்பு – தேவைக்கு.

செய்முறை:
நெல்லி சாதம் செய்வது
அரிசியை உப்பு சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். நெல்லிக் காய்களை சுத்தம் செய்து கொட்டை களை நீக்கிக் கொள்ளவும். 

1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும், பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகிய வற்றை தாளித்து சாதத்தில், நெல்லிக்காய் விழுது கலந்து நன்கு கிளறவும். இப்போது சூடான, சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)