இயற்கை மருத்துவத்தில் பயன் தரும் நித்திய கல்யாணி !





இயற்கை மருத்துவத்தில் பயன் தரும் நித்திய கல்யாணி !

0
நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். 
நித்திய கல்யாணி
இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வ தில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். 

நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை. இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். 

நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன் படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப் படுகிறது.

புற்றுநோய்
புற்றுநோய்
இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள் தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்று நோய்க்கு மருந்தாகும். 

இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய் களையும் குணப்படுத்தும். பக்க விளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

நீரிழிவு நோய்

நித்ய கல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர் போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். 
நீரிழிவு நோய்
அதிக பசி என்றாலும், பசி யின்மையும் தீரும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. 

நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச் சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)