காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது | Mushroom Stuffed Toast Recipe !





காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது | Mushroom Stuffed Toast Recipe !

0
தேவையான பொருட்கள் :

தோசை மாவு - இரண்டு கப்,

காளான் - ஒரு கப்,

வெங்காயம் - 2,

மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்,

நசுக்கிய பூண்டு - 2 பல்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காளான் ஸ்டப்ஃடு தோசை செய்வது

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காய த்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும்

நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்கி வைக்கவும்…

தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்து மாவு வெந்ததும் எடுத்து மடித்து பரிமாறவும்.

இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும். சூப்பரான காளான் ஸ்டப்ஃடு தோசை ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)