டேஸ்டியான பாகற்காய் - மேத்தி பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான பாகற்காய் - மேத்தி பிரியாணி செய்வது எப்படி?

0
பாகற்காய்... இந்தப் பெயரைச் சொன்னவுடன் பலருக்குக் குமட்டல் வந்து விடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்து விட்டது போல உணர்வார்கள். 
பாகற்காய் - மேத்தி பிரியாணி
பெரியவர்களுக்கே இப்படி யென்றால், குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். `உவ்வே...’ காட்டி ஓடுகிற செல்லங்களே அதிகம். 

பாகற்காய் சமைக்கிற தினத்தில் அவர்களைச் சாப்பிட வைக்க, ஓடிப்பிடித்து விளையாட வேண்டியிருக்கும். ஆனால், பாகற்காய் அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கவேண்டிய காய் அல்ல. 

நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன. இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது.  ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். 

இதே போல் பாலிபெப்டைடு பி ( Polypeptide P) என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும்.இது கலோரி குறைவான ஓர் உணவு. 
இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. 

சரி இனி பாகற்காய்  பயன்படுத்தி டேஸ்டியான பாகற்காய் - மேத்தி பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

நீளமான பாகற்காய் - 2,

பாசுமதி அரிசி - ஒரு கப்,

கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை ) - 4 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் - ஒன்று,

தக்காளி - ஒன்று,

உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2.

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி, ஒரு தட்டில் வைத்து... வெல்லம், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கால் மணி நேரம் ஊற விடவும். 

பிறகு நன்றாகக் கழுவி அலசி விடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஒன்றரை கப் நீர் ஊற்றி, அரிசி சேர்த்து...
உப்பு, அரைத்த தேங்காய் விழுது, பாகற்காய், கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கலக்கவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

பாகற்காய், கஸ¨ரி மேத்தி இரண்டும் நீரிழிவு நோயாளி களுக்கு மிகவும் ஏற்றது. தேவைப் பட்டால், சிறிதளவு இஞ்சி, பூண்டு வதக்கி பிரியாணியில் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)