சுவையான மீட்பால் வெஜ் சூப் செய்வது எப்படி?





சுவையான மீட்பால் வெஜ் சூப் செய்வது எப்படி?

0
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் அசைவ பிரியரா? அப்படியானால் உங்கள் உணவில் ஆட்டுக்கறி/மட்டனை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
மீட்பால் வெஜ் சூப் செய்வது
நிறைய பேர் ஆட்டுக்கறி /மட்டன் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நினைத்து, மட்டன் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். 

ஆனால் உண்மையில் மட்டனை உணவில் சேர்ப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண முடியும்.

ஏனெனில் ஆட்டுக்கறியில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், செலினியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. 
இது தவிர மட்டனில் ஜிங்க், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், போன்றவையும் உள்ளன.

முக்கியமாக மற்ற அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு. எனவே ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடா விட்டாலும், வாரம் ஒரு முறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

என்னென்ன தேவை?

மீட்பால் செய்ய...

மட்டன் பீஸ் - 50 கிராம்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூன், 

தனியாத் தூள் - 1/4 டீஸ்பூன், 

சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன், 

கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன், 

இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன், 

பப்பாளிக் காய் விழுது - 1/4 டீஸ்பூன்,

முட்டை - 1,

பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்,

பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லி சேர்த்து அரைத்த விழுது - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

சூப் செய்ய...

பீன்ஸ் - 10,

கேரட் - 1/2 துண்டு,

காலி ஃப்ளவர் - 1/4 துண்டு,

வெஜிடபிள் ஸ்டாக் - 5 கப்,

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு, 

வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு,

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

எப்படிச் செய்வது?
மீட்பால் செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சின்னச் சின்ன உருண்டை களாக செய்யவும். காய்கறிகளை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி வெஜிடபிள் ஸ்டாக், காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், மட்டன் உருண்டை களையும் சேர்த்து வேக விடவும். 

அனைத்தும் வெந்ததும் இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)