மாங்காய் பருப்பு பச்சடி செய்வது | Mango Dal Pachadi Recipe !





மாங்காய் பருப்பு பச்சடி செய்வது | Mango Dal Pachadi Recipe !

0
தேவையானவை:
பாசிப்பருப்பு – அரை கப்,

கிளிமூக்கு மாங்காய் – 1,

பெரிய வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 4,

வெல்லம் – சிறிய துண்டு,

புளித் தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்,

சீரகம் – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். 

எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், மாங்காய், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். 

பிறகு உப்பு, புளித் தண்ணீர், பருப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். மாதா ஊட்டாத சோறை, இந்த‘மாங்காய் பருப்பு பச்சடி’ ஊட்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)