பப்பாளி கூட்டு செய்வது எப்படி?





பப்பாளி கூட்டு செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

பப்பாளி - 1

கடலை பருப்பு - 3/4 கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

தேங்காய் - 3/4 கப்

சீரக தூள் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?
பப்பாளி கூட்டு
முதலில் காயாக இருக்கும் பப்பாளி எடுத்து சிறிய துண்டு களாக வெட்டி வைக்கவும்.

வாணலியில் கடலை பருப்பு எடுத்து தண்ணீர் விட்டு சமைக்கவும். பருப்பு வெந்த பின் பப்பாளி சேர்த்து நன்கு சமைக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு ஜாரில் தேங்காய், சீரக தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, பப்பாளி கலவை யுடன் கலந்து நன்றாக வேக விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பப்பாளி கூட்டில் ஊற்றவும். சுவையான பப்பாளி கூட்டு ரெடி!!
Tags: