காராமணி - பூண்டு பிரியாணி செய்வது எப்படி?





காராமணி - பூண்டு பிரியாணி செய்வது எப்படி?

0
காராமணியில், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, என சத்துக்கள் உள்ளன. வைட்டமின் C நிறைந்த காராமணி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை உடையது.
காராமணி - பூண்டு பிரியாணி செய்வது
எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயறு முக்கிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

இதற்கு காரணம், காராமணியில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது. காராமணியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை. 

எனவே, ஈரலை தாக்கும் மஞ்சள் காமாலை நோய்களும் நம்மை அண்டுவதில்லை. கோலின் என்ற வைட்டமின் B உள்ளதால், கல்லீரல்களில் நோய்களை உண்டாக்குவதில்லை.
உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு இந்த காராமணி ஆகும். காரணம், பக்கவாதம், மாரடைப்பு, போன்ற பயங்கரங்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கப்பட்டு விடும். 

ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை முற்றிலுமாக ஒழித்து விடும். அதிலும், குடல் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகள் இந்த காராமணிக்கு நிறையவே உள்ளது..
தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,

உலர்ந்த காராமணி - கால் கப் (ஊற வைக்கவும்),

நீளமான பச்சை காராமணி - 50 கிராம்,

சின்ன வெங்காயம் - 10,

பூண்டு - 10 பல்,

தக்காளி - ஒன்று,

குடமிளகாய் - பாதியளவு,

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி - சிறிய துண்டு,

கொத்த மல்லி தழை - சிறிதளவு,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியில் பச்சரிசியை வறுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடமிளகாயை வதக்கி, அத்துடன் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிய பச்சைக் காராமணியை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மிளகாய்த் தூளையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, தோல் சீவி நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு உப்பு, அரிசி, உலர்ந்த காராமணி சேர்த்து குக்கரை மூடவும். 
ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறியதும் கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். தேவைப் பட்டால், காய்கறிகளை வதக்கும் போது ஒரு டீஸ்பூன் சீரகம் அல்லது அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)