ஹாட் வெஜ் அண்ட் ஸ்வீட் சூப் செய்வது எப்படி?





ஹாட் வெஜ் அண்ட் ஸ்வீட் சூப் செய்வது எப்படி?

0
ஆரம்பத்தில் ஸநாக்ஸ் வகைகள் சாப்பிடும் போது மட்டும் கெட்சப்கள் பயன்படுத்தி வந்தோம். அதன் சுவைக்கு வீட்டில் உள்ள குழந்தைகளும் அடிமையாகி விட்டார்கள்.
ஹாட் வெஜ் அண்ட் ஸ்வீட் சூப் செய்வது எப்படி?
இப்போது சப்பாத்தி, பராத்தா, பிரெட், நூடுல்ஸ் என அவர்கள் விரும்பி சாப்பிடுகிற அத்தனை உணவுகளுக்கும் அவர்களை சரியாக சாப்பிட வைக்கிறேன் என்று கூறி கெட்சப்களை ஊற்றிக் கொடுத்து விடுகிறோம். 

அவ்வளவு ஏன் பெரியவர்கள் கூட தக்காளி சாஸ் சுவைக்குப் பழகி விட்டோம். அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தைப் பற்றி நாம் உணர்வதே இல்லை. தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் அதிக அளவில் இருப்பது நமக்குத் தெரிந்ததே. 

அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
இந்த அமிலங்கள் வயிற்றுக்குள் நிறைய செல்லும் போது அது வயிற்றுக்குள் இருக்கும் கேஸ்ட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து, நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுத்து விடுகிறது.

அதனால் தக்காளி அல்லது தக்காளி சாஸை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கேரட் - 1,

பீன்ஸ் - 2,

கோஸ் - 1/2 கப்,

மிளகு - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கறிகளை குக்கரில் வேக வைத்து ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், மிளகு போட்டு பொரிந்ததும் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும்.
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
பின்பு அரைத்த காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கொத்த மல்லித்தழை, சீஸ் துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)