ஜெர்மன் ஸ்டோலன் பிரட் ரெசிபி | German Stollen Bread Recipe !





ஜெர்மன் ஸ்டோலன் பிரட் ரெசிபி | German Stollen Bread Recipe !

0
வழக்கமான ப்ரட் சாப்பிட்டு சலித்து விட்டதா? இந்த புதுவிதமான ப்ரட்டை இப்படி செய்து பாருங்கள்.
ஜெர்மன் ஸ்டோலன் பிரட் ரெசிபி

தேவையான பொருட்கள்

500 gms மைதா

200 மில்லி லிட்டர் வெந்நீர்

10 gms ஈஸ்ட்

100 gms உலர் திராட்சை, க்ரான் பெர்ரீஸ், சிட்ரஸ் பீல் மற்றும் நட்ஸ்

30 மில்லி லிட்டர் ரம்

50 gms சர்க்கரை

10 gms உப்பு

5 gms பட்டை

2 முட்டை

50 gms வெண்ணெய்

150 gms மார்லிபன்

150 gms உருக்கிய வெண்ணெய்

சர்க்கரை

எப்படி செய்வது

ரம்மில் ட்ரை ஃப்ரூட்களை ஊற வைத்து அத்துடன் பட்டை தூளுடன் சேர்த்து ஊற வைத்து ஒரு மாதம் வரை வைக்கவும். ஒரு பௌலில் சர்க்கரை, வெண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அத்துடன் ஈஸ்ட், மைதா, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ரம்மில் ஊற வைத்த நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து கொள்ளவும்.

அதில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் கலவையை சேர்க்கவும். இந்த மாவை 15 நிமிடங்கள் வரை தனியே ஊற வைக்கவும்.

இந்த மாவை சிறு சிறு உருண்டை களாக வெட்டி அதில் மார்லிபன் சேர்த்து மடித்து கொள்ளவும்.

ப்ரட்டை ரோல் செய்து அரை வெப்பத்தில் அரை மணி நேரம் வைத்திருக் கவும். ஓடிஜி அவனில் 170 டிகிரியில் 25 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும்.

வெந்த பின் ப்ரட்டை வெளியே எடுத்து விடவும். அதன் பிரட்டின் மேல் வெண்ணெய் தடவி பொடித்த சர்க்கரை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)