காஜர் அல்வா டார்ட் ரெசிபி | Gajar Halwa Tart Recipe !





காஜர் அல்வா டார்ட் ரெசிபி | Gajar Halwa Tart Recipe !

0
கேரட் அல்வா யாருக்குத் தான் பிடிக்காது? இந்த அல்வாவை எளிமையாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

டார்ட் தயாரிக்க தேவையானவை:

500 gms வெண்ணெய்

250 gms சர்க்கரை

100 மில்லி லிட்டர் பால்

750 gms மைதா

அல்வா தயாரிக்க தேவையானவை :

1 கிலோ கிராம் கேரட்

200 gms நெய்

90 gms சர்க்கரை

200 gms கோயா

5 gms ஏலக்காய் பொடி

50 gms முந்திரி, ஃப்ரைட்

50 gms பாதாம், ஃப்ரைட்

400 மில்லி லிட்டர் பால்

ரப்டி தயாரிக்க தேவையானவை:

பால்

சர்க்கரை

ஏலக்காய் பொடி

செய்முறை :

டார்ட் செய்முறை :

வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும். அத்துடன் மைதா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை 6 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

அல்வா செய்முறை :

ஒரு அடிகணமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் துருவிய கேரட் சேர்க்கவும்.

கேரட் நன்கு வெந்த பின் அதில் சர்க்கரை சேர்த்து மேலும் வேகவிடவும்.

அதில் பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.

ஏலக்காய் பொடி, நட்ஸ் மற்றும் கோயா சேர்த்து 20-25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

ரப்டி செய்முறை :

அடிகணமான பாத்திரத்தில் பால் சேர்த்து கால் பங்கு வரும் வரை காய்ச்சவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 5-10 நிமிடங்கள் வரை சர்க்கரை நன்கு கரையும் வரை வேக விடவும்.

அடுப்பை நிறுத்தி விட்டு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். ஆறிய பின் அதில் சர்க்கரை, வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)