கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது | Eggplant Banana Thokku Recipe !





கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது | Eggplant Banana Thokku Recipe !

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் – 3

வாழைப்பூ – 50 கிராம்

லவங்கப்பட்டை – சிறு துண்டு

பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்

தக்காளி சாறு – 1 கப்

கடுகு – சிறிதளவு

இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
கத்திரி வாழைப்பூ தொக்கு செய்வது

கத்திரிக்காயை வெட்டி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கவும்.

நறுக்கிய வாழைப் பூவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, லவங்கப் பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். 

பிறகு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

வேக வைத்த வாழைப்பூ, வதக்கிய கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும். கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்
Tags: