சுவையான கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?





சுவையான கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி?

தினமும் காலையில் ஆரோக்கியமான முறையில் நாளை தொடங்க வேண்டும். நீங்கள் எப்படி ஒரு நாளைத் தொடங்குகிறீர்கள் என்பது உங்கள் முழு நாள் மற்றும் ஆரோக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 
கொத்தமல்லி சட்னி செய்வது
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தவறுகளால் உடல்நலம் மோசமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். 

காலையில் கொத்தமல்லித் தண்ணிரை குடித்து விட்டு நாளைத் தொடங்கினால், பல நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு பிபி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கொத்தமல்லித் தண்ணீரில் அன்றைய நாளைத் தொடங்குங்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு அதிக இரத்தப் போக்கு இருந்தால் கொத்தமல்லி இலை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். 
கொத்த மல்லியில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் காலையில் கொத்தமல்லி இலை தண்ணீரை குடித்து வந்தால் அசிடிட்டி பிரச்சனை குணமாகும்.தோசை, இட்லி போன்றவற்றிற்கு தேங்காய் சட்னியைத் தான் பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். 

ஆனால் இப்போது உடலுக்கு சற்று ஆரோக்கி யத்தை தரும் வகையில் கொத்த மல்லியை வைத்து விரைவில் ஈஸியாக ஒரு சட்னியை செய்யலாம். அந்த கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா !

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - 1 கட்டு

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 1

வரமிளகாய் - 5

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு
யானைகளின் பிளிறலில் இருந்து அதன் வயதை கணக்கிடலாம்
செய்முறை:
முதலில் கொத்த மல்லியின் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும்.

பின் வரமிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு மற்றும் தக்காளியை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் துருவிய தேங்காய் மற்றும் கொத்த மல்லியை போட்டு நன்கு வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 

சூடானது ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!
Tags: