சாக்லேட் அப்போ ரெசிபி | Chocolate Appo Recipe !





சாக்லேட் அப்போ ரெசிபி | Chocolate Appo Recipe !

0
அரிசி, துருவிய தேங்காய், பட்டை மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு குழந்தை களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.
சாக்லேட் அப்போ ரெசிபி
தேவையான பொருட்கள்

3/4 கப் அரிசி

3 மேஜைக் கரண்டி தேங்காய், துருவிய

1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

1 தேக்கரண்டி வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்

1/2 தேக்கரண்டி பட்டை தூள்

1/4 கப் நாட்டு சர்க்கரை

1/4 கப் கோகோ பவுடர்

ஒரு சிட்டிகை உப்பு

3 மேஜைக் கரண்டி சாக்லேட் சிப்ஸ்

2-3 மேஜைக்கரண்டி வெண்ணெய்

எப்படி செய்வது

அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டி அரைத்து கொள்ளவும். அரிசி மாவில் துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இதனை ஒரு பௌலில் மாற்றி, அதில் வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், பட்டை தூள், சர்க்கரை, கோகோ பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை 20-30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

பயன்படுத்து வதற்கு முன் அதில் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அப்பம் தயாரிக்கும் பேனை சூடுப்படுத்தி அதில் வெண்ணெய் அல்லது நெய் அல்லது எண்ணெய் தடவி வைக்கவும்.

ஒரு கரண்டி மாவை எடுத்து இதில் ஊற்றி அதன் மேல் 3-4 சாக்லேட் சிப்ஸ் தூவி மீண்டும் அதன் மேல் சிறிது மாவு ஊற்றி அப்பம் தயாரிக்கவும்.

இரண்டு நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும். அப்பத்தின் ஓரங்கள் முறுகலாக வந்ததும் அதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.

அதே போல் அடுத்தடுத்து அப்பங்களை தயாரிக்கவும். அப்பத்தை இன்னும் ருசியாக்க அதில் சாக்லேட் பவுடர், ரவை அல்லது தேங்காய் பவுடர் சேர்க்கலாம். இப்போது சூடான சாக்லேட் அப்பம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)