சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது | Chicken Francs Pasta Recipe !





சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது | Chicken Francs Pasta Recipe !

இந்த பாஸ்தா ரெசிப்பியை Shama's Fast Food Event Pasta மற்றும் Snehithi's Party Snacks Event அனுப்புகிறேன்.
சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா செய்வது
தேவையான பொருட்கள் :

பாஸ்தா (மக்ரோனி) - 200 கிராம்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் - 4 பீஸ்

எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

கொடைமிளகாய் - 1

தக்காளி - சிறியது 1

டொமட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ்- 1 -2 டீஸ்பூன்

ஆயிஸ்டர் சாஸ் - 1 -2 டீஸ்பூன்

ஹாட் சாஸ் - 1-2 டீஸ்பூன்

சிக்கன் சூப் கியூப்- 1

பெப்பர் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை :

பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து ஆற வைக்கவும்.

சாஸ் வகைகளை ரெடியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கொடை மிளகாய் சேர்த்து வதக்கவும், சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

சிக்கன் சூப் கியுப் பொடித்து போடவும்.உப்பு தேவை யில்லை, நன்கு வதக்கவும், பின்பு அத்துடன் வேக வைத்த சிக்கன் ப்ரான்க்ஸ் கட் செய்து போடவும்.
( சிக்கன் ஃப்ரான்க்ஸ் கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடித்து கட் செய்து கொள்ளவும்.)

மேலே குறிப்பிட்ட அனைத்து சாஸ் வகையும் அவரவர் டேஸ்ட்டுக்கு சேர்க்கவும். பிரட்டி விடவும்.

வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பெப்பர் பவுடர் சேர்க்கவும். 

நன்கு கலந்து விடவும். சுவையான ஜூஸி சிக்கன் ப்ரான்க்ஸ் பாஸ்தா ரெடி.

குறிப்பு :

விருப்பப் பட்டால் மொசரல்லா சீஸ் தூவி பரிமாறவும். எப்பவாவது இப்படி செய்து சாப்பிடலாம். ப்லைன் வெஜ் பாஸ்தா இதே முறையில் செய்யலாம்.

பள்ளி செல்லும் குழந்தை களுக்கு எப்பவும், இட்லி, பூரி,சப்பாத்தி பரோட்டான்னு கொடுக்கும் பொழுது மாறுதலுக்கு இப்படி பாஸ்தா செய்து கொடுக்கலாம்.
Tags: