புரோக்கோலி கிரீம் சூப் ரெசிபி செய்வது எப்படி?





புரோக்கோலி கிரீம் சூப் ரெசிபி செய்வது எப்படி?

முட்டைக்கோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரோக்கோலி. மார்க்கெட்டிலும், கடைகளில் இதைப் பார்த்திருந்தாலும், நம்மில் பலர் அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து வந்திருப்போம். 
புரோக்கோலி கிரீம் சூப் ரெசிபி செய்வது எப்படி?
புரோக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது. இதில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. 

கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன.  புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது 

புரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் புரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. 
இளசான புரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். 

ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி புரோக்கோலிக்கு உண்டு.
தேவையானவை: 

புரோக்கோலி – ஒரு கப், 

காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், 

வெண்ணெய் – தலா ஒரு டேபிள் ஸ்பூன், 

மைதா - ஒரு டேபிள் ஸ்பூன், 

வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), 

தைம் இலை – சிறிதளவு, 

கிரீம் – ஒரு டேபிள் ஸ்பூன், 

கொத்த மல்லி, துருவிய 

சீஸ் – சிறிதளவு, 

மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு, 

செய்முறை: 

கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காய த்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து மேலும் வதக்கவும். 
இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கி யவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். 

பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டி யில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேக விடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். 
வெந்த வுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… 

கிரீம், துருவிய சீஸ், கொத்த மல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.
Tags: