ஆம் ஜோல் ரெசிபி செய்வது எப்படி?





ஆம் ஜோல் ரெசிபி செய்வது எப்படி?

0
மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. மாங்காயில் கலோரிகள் இல்லை. எனவே இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம்.
ஆம் ஜோல் ரெசிபி
உங்களுக்கு அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.

கர்ப்பிணிகளுக்கு காலையில் மிகுந்த சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அப்போது மாங்காயை வாயில் போட்டுக் கொண்டால், அந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மாங்காய் சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். அதிலும் இதனை மதிய உணவிற்கு பின் உட்கொண்டால், மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை, மாங்காய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம் ருசியானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள் . :

மாங்காய் - 1

புதினா இலைகள் - 1 கைப்பிடி 

ப்ளாக் சால்ட் - 1/2 தேக்கரண்டி 

சர்க்கரை - 5 தேக்கரண்டி 

உப்பு - 1/4 தேக்கரண்டி 

வறுக்கப்பட்ட சீரக தூள் - 2 தேக்கரண்டி 

குளிர்ந்த நீர் - 4 கப் 

புதினா கொத்து - 4 

எலுமிச்சை - 4 wedges (for dressing) 

ஐஸ் கட்டிகள்

எப்படி செய்வது . :
தோல் நீக்கப்படாத மாங்காயை ஒரு இரும்பு தட்டில் வைத்து வாட்ட வேண்டும். மாங்காயின் தோல் நிறம் மாறிய பின் அதனை குளிர்ந்த நீரில் 5-10 நிமிடங்கள் வரை போட்டு வைத்தால் அதன் தோலை எளிதில் உறித்து எடுக்கலாம்.

ஒரு பௌலில் நான்கு கப் குளிர்ந்த நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதில் ஒரு கைப்பிடி புதினாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இவற்றை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வழக்கமான உப்பு மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின் இவற்றை வடிகட்டி கொண்டு அதில் வறுத்த சீரக தூளை சேர்த்து கலந்து குடிக்கலாம். தேவையான அளவு ஐஸ்கட்டி களையும் சேர்த்து கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)