கேழ்வரகு தட்டுவடை செய்வது | Ragi Plate Vadai Recipe !





கேழ்வரகு தட்டுவடை செய்வது | Ragi Plate Vadai Recipe !

0
தேவையானவை:

கேழ்வரகு அரை கிலோ,

வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு தலா 50 கிராம்,

உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகு தட்டுவடை செய்வது
கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

சிறிய அளவில் உருண்டை யாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காய வைத்து, ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:

கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும். குடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தை சமநிலைப் படுத்தும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)