7 கப் கேக் செய்வது | Making 7 cups of cake !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
என்னென்ன தேவை?

கடலை மாவு, தேங்காய்த் துருவல்,

பால் - தலா ஒரு கப்,

சர்க்கரைத் தூள் - 4 கப்,

ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்,

தூளாக்கப்பட்ட முந்திரி - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
7 கப் கேக் செய்வது

அகலமான பாத்திரத்தில் கடலை மாவை வாசம் வரும் வரை வறுத்தெடுக் கவும். தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். 

மீண்டும் வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவைப் போட்டு கொஞ்ச நேரம் வதக்கியபின் பாலைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே சர்க்கரையை சேர்க்கவும்.

பிறகு தூளாக்கப்பட்ட முந்திரி, ஏலக்காய்தூள், தேங்காய்த் துருவல் ஆகிய வற்றையும் சேர்த்து கலக்கவும்.

அடுப்பை சீக்கிரமே நிறுத்தி விட்டால் அல்வா பதத்தில் இருக்கும். அதிகமாக சூடேற்றினால் கடினமாகி விடும். 

எனவே, தகுந்த பதத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற விடவும். இதன் மீது நெய் தடவி, துண்டுகளாக வெட்டி, கப்புகளில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.
7 கப் கேக் செய்வது | Making 7 cups of cake ! 7 கப் கேக் செய்வது | Making 7 cups of cake ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 01, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚