தாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி செய்வது | Thai Roasted Chili Paneer Recipe !





தாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி செய்வது | Thai Roasted Chili Paneer Recipe !

0
தேவையான பொருட்கள்:

பனீர் (சதுரம், செவ்வகம் என்று தேவைப்படும் வடிவில் வெட்டிக் கொள்ளலாம்) – 200 கிராம்,

பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி – 5 கிராம்,

பொடியாக நறுக்கப்பட்ட பூண்டு – 5 கிராம்,

தாய் இஞ்சி (நம்மூரில் இருக்கும் பெரிய காய்கறிக் கடைகளில் ‘கெலங்கள்’ என்ற பெயரில் கிடைக்கும்) – 5 கிராம்,

தாய் ரோஸ்டட் மசாலா (இதுவும் நம்மூர் சூப்பர் மார்க்கெட் களில் கிடைக்கிறது) – 100 கிராம்,

துளசி, ரீஃபைண்ட் ஆயில், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தாய் ரோஸ்டட் சில்லி பனீர் ரெசிபி

வாணலியில் ரீஃபைண்ட் ஆயிலை விட்டு, அது காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு ஆகிய வற்றைச் சேர்த்து, வாடை போகும் வரை வதக்கவும்.
முதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !
துண்டு துண்டாக நறுக்கப்பட்ட தாய் இஞ்சியை அதோடு சேர்த்து வதக்கவும். பிறகு, தாய் ரோஸ்டட் மசாலா தூள், பனீர், உப்பு மற்றும் துளசி ஆகிய வற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பனீர் பொன் நிறமாக மாறியதும் அதில் ‘ஸ்க்யுவர்’ குச்சிகளைச் செருகி பரிமாறினால், ‘ஃபைவ் ஸ்டார்’ ஹோட்டல் அனுபவத்தோடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)