ஸ்ட்ராபெர்ரி திராமிசு செய்வது எப்படி?





ஸ்ட்ராபெர்ரி திராமிசு செய்வது எப்படி?

0
ஸ்ட்ராபெர்ரி, மஸ்கார்போன், க்ரீம் ஆகிய வற்றை கொண்டு தயாரிக்கப் பட்ட இந்த இத்தாலியன் டெசர்டை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஸ்ட்ராபெர்ரி திராமிசு! ரெசிபி
தேவையான பொருட்கள்
100 கிராம் டபுள் க்ரீம்

90 கிராம் மஸ்கார்போன்

20 கிராம் முட்டையின் மஞ்சள் கரு

30 கிராம் டியா மரியா

28 கிராம் கரும்பு சர்க்கரை

15 தண்ணீர்

110 கிராம் காபி

25 மில்லி லிட்டர் ஸ்ட்ராபெர்ரி விழுது

30 கிராம் ஸ்ட்ராபெர்ரி, நறுக்கப்பட்ட

15 கிராம் கோகோ பௌடர்

50 கிராம் சவோய்யார்டி
தினை – கேரட் ரைஸ் செய்வது எப்படி?
எப்படி செய்வது
மஸ்கார்போன், டியா மரியா மற்றும் க்ரீம் ஆகிய வற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு க்ரீம் பதத்திற்கு கலக்கவும்.

அத்துடன் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி மற்றும் அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரி யையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

சர்க்கரையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொள்ளவும்.

முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். இவை இரண்டையும் நன்கு கலந்து அப்படியே க்ரீமில் சேர்த்து கொள்ளவும்.
சவோய் யார்டியை காபியில் தொட்டு எடுத்து வைக்கவும். மஸ்கார்போன் கலவையையும், சவோய் யார்டியையும் ஒன்றன் மீது ஒன்று வைக்கவும்.
தானிய தோசை செய்வது எப்படி?
இதே போல் இரண்டும் முறை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கவும். பின், அதன் மேல் கோகோ பௌடர், ஸ்ட்ராபெர்ரி க்ரீம் மற்றும் சாக்லேட் வைத்து அலங்கரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)